இன்று ஆண்கள் தினம் -மணி

இன்று ஆண்கள் தினம் -மணி

#முதல் காதலுக்கு விசுவாசமாக இருப்பது

#தன் சம்பாத்தியத்தில் பைக் வாங்கும்போது மட்டும் அதிக மைலேஜ் தரும் பைக்காக
பார்த்து வாங்குகின்றனர் ஆண்கள்.!

*சாதிக்கும் தன்மை இருக்கோ இல்லையோ சகிப்புத்தன்மை கட்டாயம் இருக்கும்

*நியாயமா பேசுவாங்க..நியாயப்படுத்தி பேசமாட்டாங்க

*சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் ஆண்கள் வாங்கும் முதல் ஆடம்பர பொருள் ‘பாடிஸ்பிரே’!

*எவ்வளவு தான் குடும்பத்துக்குக்காக ஆண்கள் நாயா உழைச்சாலும்,மட்டன்ல நாலு எலும்பு அதிகம் வந்தால்..
கரிச்சு கொட்டுவாங்க பெண்கள்

#பந்தக் காலில் நிற்கும் முன், சொந்தக் காலில் நின்று சம்பாதிப்பவர்களே ஆண்கள்.

#காதல் தோல்வியையும் பெண்கள் மனதிற்குள்ளும், ஆண்கள் தாடிக்குள்ளும் மறைத்து வைக்கிறார்கள்

#ஆண்கள் சீரியல் பார்ப்பது கதைக்காக அல்ல, கதைமாந்தருக்காக..!

#அழகை பார்ப்பவர்கள் பெண்கள் என்றால்
அழகாய் பார்ப்பவர்கள் ஆண்கள்”!

#தன் தங்கைக்கு இருபது பவுன் நகை போட முப்பது வயது வரை காத்திருப்பது

#பேருந்தில் வரும்போது எத்தனை முறை இடம் மாறச் சொன்னாலும் சலிக்காத ஆண்கள்

#தனக்காக இல்லாமல், தன் குடும்பத்திற்காக எல்.ஐ.சி போடுவது

#ஒரே ப்யூட்டி டிப்சாக ஃபேர்& ஹேன்சன்ட் போடுவது

#மீசை எடுப்பது, தாடி வைப்பது ஒன்றே கெட்டப் சேன் ஜ்

#எவ்வளவு சம்பாதித்தாலும் பழைய லுங்கியே கட்டியிருப்பது

#ஹெல்மெட்டை கழட்டியவுடன் ஆண்கள் கண்ணாடி பார்ப்பது முகம் பார்க்க அல்ல,
முடி இருக்கானு பார்க்க..

#கல்யாணத்திற்கு முன்பு “விஜய்” போலவும்,
கல்யாணத்திற்கு பின்பு
“தலைவாசல் விஜய்” போலவும் மாறிவிடுகிறார்கள் ஆண்கள்
#முடி உதிர்தல்

#ஆண்கள் அதிக நேரம் வாக்கிங் செய்யும் இடம் துணிக்கடைகளே”!

#மனைவியுடன் வெளியூருக்கு சென்றால் கை குழந்தையுடன் அல்லாடுவது

#எல்லா கடனையும் சமாளிப்பது

#பாரமான மனைவிக்காக பெட்ரோல் டேங்கில் அமர்ந்து பைக் ஓட்டுவது என

அனைத்து ஆண்களுக்கும் ஆண்கள் தின வாழ்த்துக்கள்

மணிகண்டபிரபு