வருகிற 17-ந்தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கி விடும்.

வடகிழக்கு

பருவமழை

தென்மேற்கு பருவமழை ஜூன் 8-ந்தேதி தொடங்கியது முதல் இன்று வரை பரவலாக நல்ல மழை பெய்துள்ளது.கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்கள் மட்டுமின்றி மகாராஷ்டிரா, குஜராத், ஒடிசா மற்றும் கிழக்கு மாநிலங்களிலும் தென் மேற்கு பருவமழை அதிகம் பெய்துள்ளது.

தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியையொட்டி உள்ள நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களிலும் அதிகளவு மழை கிடைத்துள்ளது.

தற்போது தென்மேற்கு பருவமழை முடிவடையும் நிலையில் உள்ளது. 

இதுபற்றி சென்னை வானிலை மைய அதிகாரி பாலச்சந்திரன்

கூறியதாவது:

தென்மேற்கு பருவமழை விலகுவதற்கான அறிகுறிகள் தொடங்கி விட்டது. தற்போது தென்னிந்திய பகுதிகளில் கிழக்கு திசை காற்று வீசுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை தென்மேற்கு பருவமழை இன்னும் ஒருசில நாட்களில் விலகிவிடும். வருகிற 17-ந்தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கி விடும். வழக்கத்தை விட 2 தினங்களுக்கு முன்பு வட கிழக்கு பருவ மழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

கடந்த 24 மணி நேரத்தில் கோபியில் 13 செ.மீ. மழை பெய்துள்ளது. பவானி, சங்ககிரி, சேர்ந்தமங்கலம் ஆகிய இடங்களில் தலா 6 செ.மீ. மழை பெய்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை நவம்பர் 2-ந்தேதி தொடங்கியது. இந்த வருடம் முன்கூட்டியே அக்டோபர் மாதத்தில் தொடங்குகிறது.