பிகில் டிரைலர் வெளியான சில மணி நேரங்களில் சுமார் 10 மில்லியன் பேர் பார்த்தனர்

        பிகில்

நடிகர் விஜய் நடித்து தீபாவளிக்கு வெளியாகயுள்ள “பிகில்” படத்தின் டிரைலர் நேற்று மாலை வெளியானது. இந்த டிரைலர் வெளியான சில மணி நேரங்களில் சுமார் 10 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். இது மிகப் பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. மேலும், 1 மில்லியன் லைக்குகளையும் இந்த பிகில் படத்தின் டிரைலர் யூடியூபில் பெற்றுள்ளது.

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே ‘பிகில்’ படத்தின் டிரைலர் நேற்று மாலை வெளியாகியுள்ளது. ரசிகர்கள் எதிர்பார்த்தப்படியே ட்ரெய்லர் பட்டய கிளப்பும் வகையில் அமைந்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் ஏ.ஆர்.ரஹ்மானின் பிரம்மாண்டமான பின்னணி இசைதான்.

படத்தில் அதிரடியாக சண்டை காட்சிகள் இருக்கும் என்பது டிரைலக் பார்த்தாலே தெரிகிறது. ட்ரெய்லரில், ‘இந்த விளையாட்டால் தான் உங்க அடையாளமே மாறப்போகுது’, ‘எங்களுக்கு புட்பால்லாம் தெரியாது எங்க ஆட்டம் வெறித்தனமாக இருக்கும்’ போன்ற சார்ப்பான வசனங்கள் இடம்பெற்றுள்ளன. கால்பந்து வீரராக, பயிற்சியாளராக இளமையான தோற்றத்திலும், வயதான தோற்றத்தில் சற்றே அதிரடியாகவும் விஜய் காட்சி அளிக்கின்றார்.

மேலும் பிகில் படத்தின் ட்ரெய்லர் பாலிவுட் பிரபலங்கள் பலரும் பாராட்டினர். முக்கியமாக பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் தன்னுடைய ட்விட்டரில், ‘படம் சிறப்பான ஒன்றாக அமைய நண்பர்கள் அட்லி, விஜய் மற்றும் ஏர்.ஆர்.ரஹ்மான் ஆகியோருக்கு என்னுடைய வாழ்த்துகள். சக் தே இந்தியா படம் போல் உள்ளது’ என குறிப்பிட்டுள்ளார்.