அமுக்கரா மூலிகையின் வியக்க வைக்கும் பயன்கள்

அமுக்காரா இந்தியாவின்  அற்புதம்.

இந்தியாவில் வயாகரா கள்ளத்தனமாக அதிக விலைக்கு விற்கப்பட்டு வருகிறது. அதையும் வாங்கி பயன் படுத்துகிறார்கள். அறிவாளிகள். வயாகராவை விடபல மடங்கு அதிக பலனளிக்கும் அற்புத மருந்துகள் நம் இந்திய மருத்துவத்தில் உண்டு.

அதே நேரத்தில் வயாக்ரா உடலை மோசமாக்கி உயிரையும் போக்கிவிடுகிறது. ஆனால் இந்திய மருந்துகளோ எவ்வித பக்க விளைவையும் ஏற்படுத்தாது. ஆண்களுக்கு தாம்பத்திய சுகத்தையும் நீடித்து வைக்கிறது. இதுவே இந்திய மருத்துவ முறையின் அற்புதம்.

இந்தியாவில் விளைந்த பாசுமதி, மஞ்சள் இன்னும் பல மூலிகைகளுக்கு அமெரிக்கா சொந்தம் கொண்டாடி வருவதுபோல் நமது ஆயுர்வேத மருந்தான அமுக்கரா கிழங்கையும் அமெரிக்கா திருடி விட்டது.

அமுக்கிராவும் வயாகரா போன்றதுதான் என்பது ஆயுர்வேத வைத்தியர்கள் அனைவருக்கும் தெரியும். அமுக்கிராகிழங்கை பாலில் வேகவைத்து எடுத்து அத்துடன் பனங்கற்கண்டு சேர்த்து இடித்து சூரனமாக்கி சிறிது தேன் கலந்து அருந்திவர ஆண்களுக்கு இல்லற வாழ்க்கையில் இணையிலா இன்பத்தை நல்கும்.

அமுக்ரா சூரணம், மாத்திரை மற்றும் அமுக்ராவை முதன்மையாக வைத்து மற்ற கடைசரக்குகளுடன் சேர்த்து லேகியமாக செய்த அசுவகந்தா லேகியம் ஆயுர்வேத மருந்தகங்களில் கிடைக்கும்.

அதனை பயன்படுத்தி எப்பேர் பட்ட ஆண்மைக் கோளாறுகளையும் சரி செய்து இல்லற வாழ்வில் வெற்றியடைய வைக்கும். செலவும் மிகவும் குறைந்தது.

மனிதன் நீடித்த ஆயுளையும், நல்ல உடல் ஆரோக்கியத்தையும் வைத்திருக்க காரணமான மருந்துகள் உண்டு. இந்திய மருத்துவத்தில் நம் முன்னோர்களால் கையாளப்பட்டு வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

அமுக்ரா மட்டுமல்ல காலையில் இஞ்சி, கடும் பகல் சுக்கு, மாலையில் கடுக்காயை ஒரு மண்டலம் உண்டு வந்தாலே எவ்வித வயாக்ராவும் தேவையில்லை என்பது தேரையர் வாக்கு.

 

காலை இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் மண்டலம் உண்டுவர கோலையூன்றி குறுகி நடப்பவன் கோலை வீசி குலுக்கி நடப்பனே என்கிறார் தேரையர்.

அதுமட்டுமல்ல திரிபலாசூரணம் என்று ஓர் அற்புத சூரணம் உண்டு. அதனை இரவில் மட்டும் பனங்கற் கண்டு சேர்த்து சாப்பிட்டு பின் பசும்பால் உண்டு வர 21 நாட்களில் அபாரமான சக்தி பெற லாம்.

கருவேலம ்பிசினை சுத்தமாக்கி பொடித்து நெய்யில் பொரித்து எடுத்து சாப்பிட்டுவர விந்து இறுகும்.

அதைப் போலவே ஆலம்பிசின், முள்இலவம் பிசின், முருங்கை பிசின் போன்றவை களும் அற்புத சுகத்தை அளிக்கும். ஆனால் இம்மூன்றையும் குறிப்பிட்ட அளவு தண்ணீரில் 12 மணிநேரம் ஊற வைத்து பின் வடித்து அந்நீரை அருந்தி வர வேண்டும்.

நமது இந்திய மருத்துவத்தில் அமுக்ராவுடன் உடலுக்கு வலிமையூட்டும் மற்ற கடைச்சரக்குகள் சேர்க்கப் படுவதால் நம் ஆயுளை வளர்க்கிறது. ஆனால் அமெரிக்க வயாக்ராவில் எதை எதையோ எப்படியோச் சேர்த்து நம் உயிரை எடுத்துவிடுகிறது.

ஆண்மையை  குதிரைவேகத்தில் செயல்படவைக்கும் மூலிகை வேர் தான் அஸ்வகந்தா என்று அழைக் கப்படும் அமுக்கிரா கிழங்கு ஆகும்.

ஆண்குறின் இரத்த ஒட்டத்தை பெருக்கி உடலு றவின் போது அதீத உத்வேகத் தைத் தரும். இது சீமை அமுக்கிரா, நாட்டு அமுக்கிரா என்று இரண்டு வகை ப்படும்.

இதில் சீமை அமுக்கிரா கிழங்கு ஆண் கள் உட லுறவு கொள்ளும் போது அதிக நேரம் தாக்குப் பிடிக்க இது உதவுகிறது. இதை ஒரு மூலிகை “வயாக்ரா” சொ ன்னால் அது மிகையாகாது.

அமுக்கிரா மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. மூளையி ன் அழற்ச்சி, வயோதிகம், போ ன்றவற்றில் இருந்து மூளை
விடுபட பெரிதும் உதவுகின்றது.

சீமை அமுக்கிர பொடியை நெய்யுடன் கலந்து கலந்து சாப் பிட்டால் விந்து பெருகும். குழந்தை பேரு இல்லாதவர்கள் இதை பொடி செய்து தேனு டன் சாப்பிட்டு வந்தால் குழந்தை பேரு உண்டாகும்.

உடல் ரீதியாக, மன ரீதியாக ஏற்படக் கூடிய பல பிரச்சனைகளை இது தீர்க்க உதவும். இது உடலின் வலிமையை அதிகரித் து நோய் எதிர்ப்பு சக்தியை உண் டாக்க வல்லது.

மூளையின் செயல்பாட்டினை அதிகரித்து ஞாபக சக்தியை உண்டாக்கும். நரம்புகளுக்கு புத்துணர்ச்சி அளி க்கும் அதே வேளையில் மூட்டு களின் வீக்கத்தைக் குறைத்து மூட்டு வலிக்கு சிறந்த நிவாரணமாக விளங்கும்.

ஆண்மைக்குறைவு உள்ளவர்கள் பின்பற்ற வேண்டியவை!

நரம்புத் தளர்ச்சி, ஆண்மைக்குறைவு, உடலுறவில் முழு இன்பம் பெற, துரித ஸ்கலிதம், அடிக்கடி தூக்கத்தில் விந்து வெளியாதல், கைஅமுக்கரா மூலிகை கால் நடுக்கம், கண்பார்வைக் குறைவு, உடல் மெலிவு போன்ற குறைபாடுகளுக்காக உலகம் முழுவதும் இன்று எல்லா மருந்துக் கம்பெனிகளும் போட்டி போட்டுக் கொண்டு மருந்துகளை தயார் செய்து, விளம்பரங்கள் வந்த வண்ணமாக உள்ளது.

இதன் மீது நாட்டம் கொண்டவர்கள் அறிந்தும், அறியாமலும் அதிகமான விலையைக் கொடுத்து வாங்கி உபயோகித்து பின் விளைவுகள், பக்க விளைவுகளினால் உடல் நலம் கெட்டு, மனம் கெட்டு விரக்தி அடைந்து விடுகின்றனர்.

ஆகவே, இதைப் பற்றிய ஒரு தெளிவான விளக்கம் இளைஞர்களுக்கு வேண்டுமல்லவா? இத்தகைய வினாக்களுக்கு விடையளித்து, தெளிவுபடுத்தி தைரியப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

ஆண்கள் 13 – 14 வயதில் விந்து உற்பத்தி ஆரம்பம் ஆகிறது. இது 20 – 25 வயதிற்கும் அதிகமாக உற்பத்தி ஆகும். அப்போது உடல் நல்ல பொலிவுடனும், வளர்ச்சியுடனும், உறுதியுடனும் காணப்படும். பொதுவாக இந்தக் காலக் கட்டத்தில் காம இச்சைகள் உடலில் அதிகமாக தோன்றும். 

இது இயற்கையான ஒன்று தான். இதனால் எந்தப் பாதிப்பும் உடலுக்கு இல்லை. அதாவது வெளியான விந்துவை உடலானது மறுபடியும் உற்பத்தி செய்து கொள்ளும் வரை உடலுக்கு கெடுதல் இல்லை. விந்து உற்பத்தி ஆகி விந்துப் பையில் சேமித்து வைக்கப்படுகின்றது. அது நிறைந்த உடன் தாமாக வெளிப்படுத்தாவிட்டாலும் தானாக வெளியாகிவிடும். இது உடலின் ஒரு இயற்கையான சுழற்சி ஆகும்.

கவலை ஆண்மை குறைவுக்கு முக்கிய காரணம்.மகிழ்ச்சி தான் அனைத்து விதமான குறைபாடுகளுக்கும் மருந்து.

பயந்தவனும் கோழையும் இறந்து கொண்டே இருக்கின்றனர் என்றார் மகாத்மா காந்தி. பயம் பலத்தை கெடுக்கும் அது பிணியைத் தருவதுடன் இன்பம் அனுபவிப்பதையும் இழக்கும் படி செய்யும்.

ஆகவே, மனதை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். மனதிற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் நேரடித் தொடர்புண்டு.

இந்த நோயினால் இருந்து மீள முறையான வாழ்க்கை முறைகளை கடைப்பிடித்தல், தேவையான மருந்துகள் எவை என்று தெரிந்து கொள்ளுதல், சக்தியான உணவை உண்ணுதல் போன்றவைகள் இந்த நோய்களில் இருந்து நம்மை காப்பாற்றும்.

தினமும் காலை, மாலை சுமார் 20 நிமிடம் எளிய உடற்பயிற்சிகளை அதாவது நடத்தல், குனிந்து நிமிர்தல், நீந்துதல், உட்கார்ந்து எழுதல், மெல்லோட்டம், சைக்கிள் ஓட்டுதல், கை கால் விரல்களை நீட்டி மடக்குதல், ஜாக்கிங், ஸ்கிப்பிங், ஜம்பிங், மூச்சுப் பயிற்சி போன்றவை செய்யலாம்.

இதனால் உடல் உறுதியும், நரம்புகள், எலும்புகள் பலமும் பெறும். சாதாரண நீரை குடிக்க, குளிக்க உபயோகித்தல் நல்லது.

தினமும் 7-8 மணி நேரம் தூங்குவது முக்கியம்

 கோபத்தையும், கவலையையும் நீக்கி, சாந்தமான மனநிலையில் இருத்தல் நமது மொத்த ஆரோக்கியத்தையும் அதிகரிக்கச் செய்யும். 15 நாட்களுக்கொரு முறை தான் விந்துவை வெளிப்படுத்துதல் வேண்டும். அடிக்கடிக் கூடாது.

அன்று கிராமங்களில் சாதாரண நோய்கள் முதல் கொடிய நோய்கள் வரை எல்லாவற்றுக்கும் அருகில் உள்ள அரிய மூலிகைகளைக் கொண்டு பக்கவிளைவுகள் இன்றி குணப்படுத்தி வந்தனர்.

இந்த மூலிகைகளில் வியக்கத்தக்க வகையில் குணம் இருப்பது நாம் அறிந்த ஒன்று. இந்த மூலிகைகளால் குணமாக்க முடியாத நோய்களே இல்லை.

இதனை இந்து மத முன்னோர்கள் ஒவ்வொரு தெய்வத்திற்கும் உகந்த மூலிகைகள் என அம்மைக்கு – வேப்பிலை, சிவனுக்கு – வில்வம், விநாயகருக்கு – அருகம்புல், விஷ்ணுவுக்கு – துளசி, பிரம்மாவுக்கு – அத்தியிலை என்று வைத்து தினசரி பூஜைகளின்போது வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக உட்கொள்ள கொடுத்து நோய் வருமுன்னர் மக்களின் பொதுவான ஆரோக்கியத்தை காத்தனர். மேலும், அவ்வப்போது வரும் நோய்களை குணப்படுத்தும் மூலிகைகளை அறிந்துள்ளார்கள்.

 ஆண்மைக் குறைவுக்காக, வேப்பிலை, அருகு, அத்தி, முருங்கை, ஆலயிலை, அரசஇலை, மாவிலை, அமுக்கரா, நாவல், ஓரிதழ் தாமரை போன்றவைகள் மிக பயன் உள்ளதாக உள்ளது. இக்குறைபாடு உள்ளவர்கள், இவைகளைப் பறித்து வெய்யிலில் உலர்த்தி பொடி செய்து பின் சம அளவில் ஒன்றாகக் கலந்து ஒரு பாட்டிலில் வைத்துக் கொள்ளவும். பின் இதில் இருந்து இரண்டு ஸ்பூன் தூள் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் கலந்து உணவுக்கு ஒரு மணி நேரம் முன்னதாக உட்கொள்ள சுமார் 30 – 60 நாட்களில் நல்ல பலன் தெரியும்