அமலாபால் ஆடையில்லாமல் பரிதாபமாக இருந்தார் – ஆடை இயக்குனரின் ஓபன்டாக்

 

அமலாபால் ஆடையில்லாமல் பரிதாபமாக இருந்தார் – ஆடை இயக்குனரின் ஓபன்டாக்

படப்பிடிப்பின் போது நடிகை அமலா பாலை ஆடையில்லாமல் பார்ப்பதற்கு பாவமாக இருந்தது என ஆடைப்படத்தின் இயக்குனர் ரத்னகுமார் கூறியுள்ளார். ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால் கதையின் நாயகியாக நடித்துள்ள படம் ஆடை. இப்படம் நேற்று வெளியாவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் பொருளாதார பிரச்சினையால் பட ரிலீஸ் தடைப்பட்டு, இன்று வெளியாகி உள்ளது. இந்நிலையில் இப்படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து இயக்குனர் ரத்னகுமார் இணையதள சேனல் ஒன்றிடம் பகிர்ந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “ஒரு காட்சியில் ஆடையில்லாமல் டிஷ்யூ பேப்பர்களை உடலில் சுற்றிக்கொண்டு நடிக்க வேண்டும் என்று அமலா பாலிடம் கூறினோம். உடனே அவர் உடல் முழுவதும் கேப் இல்லாமல் அட்டை பாக்ஸ் போன்று சுற்றிக்கொண்டு வந்தார். ஆனால் அந்த கதாபாத்திரத்திற்கு டிஷ்யூ பேப்பர்ஸ் கிடைக்காமல் கையில் கிடைத்ததை எடுத்து அரை மணி நேரத்தில் உடலில் சுற்றி நிர்வாண உடலை பதட்டத்தோடு மறைத்து கொண்டு ஓடி வர வேண்டும் என தெளிவாக மீண்டும் கூறிய பின்னர் அமலா பால் ஒரு விதமான பயத்துடன் வந்ததை பார்த்து ரொம்ப பாவமாக இருந்தது” என்றார்.