சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவுகள்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற பலாக்காய் உணவுகள்

லா, மர வகையை சார்ந்தது. இது வெப்ப நாடுகளில் நன்கு வளரும். கேரளா, தமிழகம், கர்நாடகம், கோவா மற்றும் வடகிழக்கு

மாநிலங்களில் பலா அதிகமாக விளைகிறது.

கிழக்காசிய நாடுகளான இலங்கை, மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா மற்றும் வங்காளதேசம் போன்ற நாடுகளிலும் பலா மரங்கள்

அதிகம் உள்ளன.

பலாப்பழத்தை பற்றியே நாம் அதிகம் அறிந்திருக்கின்றோம். பலா பிஞ்சு மற்றும் இளம் காய் சிறந்த காய்கறி உணவாக

பயன்படக்கூடியது. சுவையானது. அதில் பல அரிய சத்துக்கள் நிறைந்துள்ளது.

இலங்கையில் பலாக்காய் உணவுகளை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். அரிசி உணவுக்கு இணையான அளவு மாவு சத்து இதில்

உள்ளதால் பலா மரத்தை ‘அரிசி மரம்’ என்றும் அழைக்கின்றனர்.

வங்காளதேசத்தில் பஞ்சம் ஏற்பட்ட காலத்தில் பலாக்காய் உணவுகளை உண்டு ஊட்டச்சத்து குறைபாட்டை மக்கள் ஈடு செய்தார்கள்.

‘ஏழைகளின் காய்’ என அந்நாட்டில் பலாக்காய் கொண்டாடப்படுகின்றது.

நம் அண்டை மாநிலமான கேரளாவில் 3 ஆயிரம் வருடங்களாக பலாக்காயை உணவில் பயன்படுத்தி வருகிறார்கள். போர்ச்சுகீசியர்கள்

ஆதிக்கத்திற்கு முன்பு வரை அரிசி உணவுகளுக்கு இணையாக பலாக்காய் உணவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. போர்ச்சுக்கீசியர்கள்

வருகைக்கு பின்பு மரவள்ளிக்கிழங்கு அறிமுகப்படுத்தப்பட்டு, பலாக்காயின் பயன்பாடு குறைந்து விட்டது.

பலாக்காயில் வைட்டமின் ஏ, பி, சி மற்றும் இரும்புசத்து, பொட்டாசியம், கால்சியம், புரதம் போன்ற சத்துகளும், உயர்தரமான மாவுச்

சத்து மற்றும் நார்ச்சத்தும் உள்ளது.

மேலும் சபோனின், ஐசோபிளாவின், லிக்கினேஸ் போன்ற தாவர ஊட்டச்சத்துகள் அதில் உள்ளன.

அதனால் பலாக்காய் சிறந்த ஆண்டி ஆக்ஸிடண்ட் ஆக செயல்படுகிறது. அதில் உள்ள ‘ஐக்கலின்’ என்ற சத்து, நமது உடலுக்கு சிறந்த

நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. பலாக்காயில் 60 சதவீதம் நீரில் கரையாத நார்ச்சத்துள்ளது. நீரில் கரையக் கூடிய ‘பெக்டின்’ என்ற

நார்ச்சத்தும் பெருமளவு இருக்கிறது. இது மலச்சிக்கலை தீர்க்கிறது. ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கின்றது. உயர் ரத்த

அழுத்தத்தையும் சீராக்குகிறது.

பலாப்பிஞ்சுக்கு உடலில் உள்ள பித்தத்தை நீக்கும் சக்தி இருக்கிறது. ஆண்மையை அதிகரிக்கும் தன்மையும் உள்ளது.

பலாக்காய் உணவுகள் தாய்ப்பாலை அதிகரிக்கும் சக்தி கொண்டது. பலாக்காயில் உள்ள மாவுச் சத்தும், அதன் நார் பொருட்களும்

உடலில் சர்க்கரையின் அளவை ரத்தத்தில் அதிகப்படுத்துவதில்லை. பலாக்காய் உணவுகளை உண்ட முப்பது நிமிடங்களில் ரத்தத்தில்

சர்க்கரையின் அளவு குறைவதாக மருத்துவ ஆய்வுகள் உறுதிபடுத்துகின்றது.

இது சர்க்கரை நோயாளிக்கு இனிப்பான செய்தி.

பலாக்காயை கொண்டு பல பாரம்பரிய உணவுகள் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் தயாராகின்றன. இன்றைய பரபரப்பான

வாழ்க்கை சூழலில் பலாக்காயை வெட்டி சமைப்பதற்கு அதிக நேரமாவதாலும், பருவ காலம் தவிர மற்ற நேரங்களில் கிடைப்பது

கடினமாக இருப்பதாலும் அதை உணவுகளில் பயன்படுத்துவது குறைந்து வருகிறது.

சர்க்கரை நோய்க்கு சிறந்த உணவாக இருக்கும் காரணத்தாலும், அதன் அறிய வகை சத்துக்கள் மக்களுக்கு பயன்படுத்தும் விதத்திலும்

இந்திய வேளாண்மை ஆராய்ச்சி மையம், பலாக்காய் அதிகம் கிடைக்கும் காலங்களில் அதை பதப்படுத்தி சந்தைப்படுத்தும் முயற்சியில்

விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கிறது. அதைவைத்து தொழில் தொடங்கவும் உதவி புரிகிறது. இதன் மூலம் பதப்படுத்தப்பட்ட

பலாக்காய் விற்பனை அதிகரித்து வருகிறது.

பலாக்காயை வெட்டும்போது கைகளில் சிறிது எண்ணெய் தடவிக்கொள்ளவேண்டும்.

வெட்டும் கத்தி அல்லது அரிவாள் மனையிலும்

எண்ணெய் தடவி கொள்ளவும். முதலில் மேல்தோலை மெலிதாக சீவிவிடுங்கள். பின்பு நான்கு பாகமாக வெட்டி நடுவில் இருக்கும்

சக்கைபகுதியை நீக்கி விடுங்கள். பின்பு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளுங்கள். காயில் விதை முற்றி இருந்தால் விதையின் மேல்

உள்ள தோலை நீக்கி விடவும்.